TNPSC வேலைவாய்ப்பு 2025: அரசு உதவி வழக்குரைஞர் (Level-II) – 61 காலியிடங்கள்

தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வு துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்குரைஞர் (நிலை-II) பணிகளுக்கான நேரடி நியமன அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31, 2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்

  • அறிவிப்பு எண்: 18/2025
  • பதவி: அரசு உதவி வழக்குரைஞர் – நிலை II
  • மொத்த காலியிடங்கள்: 61

கல்வித் தகுதி

  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்டப் பிரிவில் இளநிலை பட்டம் (LL.B) பெற்றிருக்க வேண்டும்.
  • வழக்குரைஞர் சங்கத்தில் உறுப்பினர் பதிவு கட்டாயம்.
  • குற்றவியல் நீதிமன்றங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் வழக்கு நடத்திய அனுபவம் இருக்க வேண்டும்.
  • 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழ் ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி நியமன நேரத்தில் உடல் தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு

  • 1.7.2025 அன்றைய நிலவரப்படி குறைந்தபட்ச வயது 26.
  • வயது சலுகை விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத் தேர்வு
  • நேர்முகத் தேர்வு
  • முதல்நிலைத் தேர்வு 15.02.2026 அன்று நடைபெறும். மற்ற தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

கட்டண விவரம்

  • ஒருமுறை பதிவுக் கட்டணம்: ₹150
  • முதல்நிலைத் தேர்வு கட்டணம்: ₹100
  • முதன்மைத் தேர்வு கட்டணம்: ₹200
  • அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டண விலக்கு விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பத்தை TNPSC இணையதளமான https://tnpsc.gov.in இல் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

  • ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025
  • மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.



https://newstamil.in/