வருங்கால முதல்வரே; அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்!
இளைய தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த வருடம் வெளியாக வேண்டியது. கொரோனா நோய் தொற்று காரணத்தால் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை, திருச்சி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றத்தினர் தற்போது திருச்சி மாவட்டம் முழுவதும் `நாளைய முதல்வரே! இளம் தலைவரே!’ என போஸ்டர் ஒட்டியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
Comments are closed.