Thursday, September 10, 2026
NEWS

கண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது? ஆச்சர்யத்தில் மக்கள்

இந்தியா தற்போது மார்ச் 25 முதல் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் விதிக்கப்பட்டது.

இதனால் மக்கள் வீடுகளில் அடைந்துள்ள நிலையில் நாட்டில் பெரும் தொழிற்சாலைகள் உட்பட அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற காலங்களில் கூட ஒரு மகிழ்ச்சியான செய்தி கங்கை, யமுனை நதியின் நீர் சுத்தமாகிவிட்டது என்பதே. சமூக ஊடகங்களில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது, பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள நதியை தூய்மையாகக் காணலாம்.

டெல்லியை கடந்து செல்லும் யமுனை ஆறும், உத்தர பிரதேசம் வழியாக வாரணாசி உள்ளிட்ட பகுதிகளை கடந்து செல்லும் கங்கை ஆறும் மிக தூய்மையாக உள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Comments are closed.