கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 649 ஆக உயர்வு
கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 10ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.