மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிப்பு

பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும், 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுகிறது.

அதன்படி, காலை 7 மணி முதல், இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனைவரும், தாங்களாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேற கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவம், ரயில்வே, விமானம், காவல், பத்திரிகை உள்ளிட்ட சேவை துறையினர் மட்டும் தங்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இப்போது உலக நாடுகளிலும் தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 5 பேர் இறந்துள்ளனர்.

இதையடுத்து மக்கள் தனிமையில் இருக்க வேண்டும். கூட்டம் கூடக்கூடாது. விழாக்கள் உட்பட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

எவை இயங்கும்?

இந்த மக்கள் ஊரடங்கின் போது மருத்துவமனைகள் அனைத்தும் திறந்தே இருக்கும்

கால் டாக்சி, ஆட்டோ போன்றவை பொதுமக்களின் அவசர பயணத்திற்காக இயக்கப்படும்

சில புறநகர் ரயில் சேவைகளும் தொடரும்

நட்சத்திர ஹோட்டல்களும் திறந்தே இருக்கும்

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது

மெட்ரோ ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன

எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவையும் இருக்காது

வணிக வளாகங்கள், திரையங்குகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், கடைகள், உணவகங்கள் திறக்கப்படாது.



Comments are closed.

https://newstamil.in/