விவாகரத்து குறித்து டிடி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமாகியிருந்தாலும் காஃபி வித் டிடி நிகழ்ச்சியை தனக்கே உரிய ஸ்டைலில் தொகுத்து வழங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு இவர்களது முடிந்தது இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர் இந்த நிலையில் தன்னுடைய காதல் முறிவு குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் டிடி.

டிடி பேட்டியில் உறவுகள் பற்றி அவர் கூறும்போது, ‘அதில் உறவு என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் சூழ்நிலை காரணமாக லவ் உடையவும் செய்யும் சிலர் நம்மை ஆதரிப்பார்கள் சிலர் நம்மை கீழே தள்ளி ஆதரிப்பார்கள் அந்த பிரிவு கண்டிப்பாக கஷ்டப்படுத்தும், நாம் தான் அதையெல்லாம் தள்ளி வச்சுட்டு முன்னேற வேண்டும், அடுத்தது என்ன என்பதை பார்த்துவிட்டு போய்விடவேண்டும் அப்படித்தான் அனைவரும் போக வேண்டும் என்று நினைக்கிறேன்.

விவாகரத்து ஆன நாள் என் மனதில், எப்படியாவது கோர்ட்டுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டே இருந்தது. அங்க வருங்கால வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு, அதன் பிறகு இப்போது வரை ஸ்ரீகாந்த்திடம் பேசவில்லை, சந்திக்க கூட இல்லை, ஆனாலும், வாழ்க்கை கடந்து சென்றுக்கொண்டே தான் உள்ளது, கிடைச்ச வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி’ என கூறியுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/