அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன் (98), உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டிற்கு மேலாக கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

தொடர்ந்து வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் அவர் இன்று இரவு 8.15 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் நேரில் வந்து மருத்துவர்களிடம் அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவா்கள், தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Comments are closed.

https://newstamil.in/