சீனாவில் கொரோனா மரணம் 2,200; இத்தாலியில் முதல் கொரோனா வைரஸ் மரணம்!
இத்தாலியில் 78 வயதான ஓய்வுபெற்ற செங்கல் தொழிலாளி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். வெனெட்டோ கவர்னர் லூகா சாயாவை இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
ஐரோப்பிய நாட்டில் சுகாதார அதிகாரிகள் 14 புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்துள்ளது, மொத்தமாக 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீன நகரமான வுஹானில் தோன்றியது, அதன் பின்னர் அந்த நாட்டில் மட்டும் 2,200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது, அதே நேரத்தில் இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் வைரஸ் பதிவாகியுள்ளன.
Comments are closed.