கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1,500 தாண்டியது!

கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டியது. சீனாவின் ஹுபேய் மாகாணம் ஊஹான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 42,364 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மேலும் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தாக்குதலை கண்டறியும் உபகரணங்கள், சீனாவில் பற்றாக்குறையாக உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீன அரசு அறிவித்துள்ளதை விட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே சீனாவுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்ததற்காக இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்தியா நடந்து கொண்டது இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பறைசாற்றுவதாக சீனா வெளியுறவுத்துறை புகழாரம் சூட்டியுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/