இந்தியா ‘சூப்பர்’ ஓவரில் வெற்றி; ரோகித் அதிரடி! – வீடியோ
நியூசிலாந்து மண்ணில் மூன்றாவது டுவென்டி-20 போட்டியில் அசத்திய இந்திய அணி, ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் முதன் முறையாக ‘டுவென்டி-20’ கோப்பை வென்று சாதனை படைத்தது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல். ராகுல் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளில் சோபிக்காத ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோகித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை மாற்றத்திற்காக ஷிவம் துபேவை களமிறக்கினார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. இதனால் சமனில் முடிந்தது. நியூசிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் அடித்து இருந்தார்.
இதை தொடர்ந்து சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. இந்தியா தரப்பில் பும்ரா வீசிய ஓவரில் நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது.
18 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்தியா. சவுத்தீ வீசிய முதல் 2 பந்தில் ரோகித் 3 ரன் எடுத்தார். 3வது பந்தில் பவுண்டரி அடித்த ராகுல், அடுத்து ஒரு ரன் எடுத்தார். கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டன.
5வது பந்தில் ரோகித் சிக்சர் அடிக்க, டென்ஷன் எகிறியது. கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற நிலையில் ரோகித் மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க இந்தியா ‘சூப்பர்’ வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ‘டுவென்டி-20’ கோப்பை வென்று (3-0) அசத்தியது.
Comments are closed.