டிக்டாக் கள்ளக்காதல் பெண்ணுடன் ஓட்டம்; மனைவி குழந்தை கதறல்!

சீனா காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி கற்கும் சமூக வலைதளமான டிக் டாக் இப்பொழுது தமிழகத்தில் உள்ள ஆண்கள், பெண்களையும் தவறான பாதைக்கு கொண்டு செல்ல வழிவகுக்கிறது.

இந்நிலையில் “என் புருஷன் பல பொண்ணுங்களோட பழகுறாரு நெருக்கமாக இருக்காரு டிக்டாக் பெண்ணுடன் ஓடியே போய் விட்டார் அவரை மீட்டு தாருங்கள் எல்லாத்துக்கும் காரணம் இந்த டிக்டாக்தான் அதனை ஒழிக்க வேண்டும்” என்று இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தந்திருந்தார்.

கடலூர் மாவட்டத்தில் மனைவியைக் கைவிட்டு விட்டு டிக்டாக் தோழியுடன் ஓடிப் போன கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். பண்ருட்டி வட்டம் மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் 28 வயதாகிறது இவரது மனைவி சுகன்யாவுக்கு 25 வயதாகிறது 3 வயதில் தர்ணிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர், அதில் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார். நாளடைவில், பல பெண்களுடன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட அவருக்கு டிக் டாக் மூலமாக பல தோழிகள் கிடைத்தனர் கணவரின் போக்கு முற்றிலும் மாறியதாக மனைவி சுகன்யா புகார் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிநயா என்ற பெண்ணை காணவில்லை என அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிக் டாக்கில் அதிக ஆர்வம் காட்டிவந்த கவிநயா என்கிற பெண்ணை காணவில்லை என்று அவரது உறவினர்கள் அறந்தாங்கி ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

இதனால் அறந்தாங்கி போலீசார் கவிநயாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி ராஜசேகருடன் பேசியது தெரியவந்தது.

சுகன்யா அளித்த புகாரின்பேரில் இரு மாவட்ட போலீசாரும் தேடியபோது, ராஜசேகர், கவிநயாவும் சிக்கினர் அப்போது கவிநயா போலீசாரிடம் சொல்லும்போது, “ராஜசேகர் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டார், ஆனால் நாங்கள் 2 பேரும் காதலித்துவிட்டோம், கல்யாணமும் செய்துள்ளோம்” என்றார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், கவிநயாவின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுடன் கவிநயா பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார், மனைவியை ஏமாற்றி இன்னொரு பெண்ணை திருமணம் செய்த ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.



Comments are closed.

https://newstamil.in/