மோடிக்கு எதிராக பேசினால் உயிருடன் எரிக்கப்படுவீர்கள் – பாஜ., அமைச்சர்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசினால் உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான பிரசாரம் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணைமுதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் ரகுராஜ் சிங், ஒரு சதவீத மக்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எங்கள் வரிகளில் சாப்பிட்டு விட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராகவே கோஷங்கள் எழுப்புகின்றனர். அப்படி பேசியவர்கள் உயிருடம்ன் எரிக்கப்படுவீர்கள், இந்த நாடு அனைத்து ஹிந்து மக்களுக்கும் சொந்தமானது. என பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/