அஜித் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை!

சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், அஜித்தின் வீட்டில் வசித்து வரும் அவரின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா, மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து இந்த சோதனை செய்ததாக செய்திகள் பரவின.

ஆனால் இதை வனத்துறை மறுத்துள்ளது. ‘அஜித் வீட்டில் சோதனை என வெளியான செய்தி தவறானது’ என சென்னை வனத்துறை தலைமையிட வனச்சரகர் மோகன் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சந்திரா கூறுகையில், இது முற்றிலும் தவறான செய்தி. நான் எந்த மலைப்பாம்பையும் வளர்க்கவில்லை. அஜித் வீட்டிலோ, என் வீட்டிலோ சோதனை எதுவும் நடக்கவில்லை. அஜித் மற்றும் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க இப்படியொரு செய்தி பரப்படுகிறது என்றார்.Comments are closed.

https://newstamil.in/