உக்ரைன் விமானம் நொறுங்கி விழுந்து 176 பேரும் பலி
ஈரானில் இருந்து இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்ட போயிங் 737 விமானம் (பி.எஸ் 752) தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விமானத்தில்167 பயணிகளும் ஒன்பது விமானப் பணியாளர்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இன்று அதிகாலை பி.எஸ் 732 விமானம் விபத்துக்குள்ளானது. அதில் உயிரிழந்தவர்களில் 82 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 11 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் ஸ்வீடனைச் சேர்ந்த 10 பேர், 4 ஆப்கானியர்கள், 3 ஜெர்மானியர்கள் மற்றும் 3 பிரிட்டன் பயணிகளும் உயிரிழந்தனர்’ என உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி வாடிம் பிரிஸ்டைகோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
169 பேர் இந்த விமானத்தில் பறக்க டிக்கெட் வாங்கியிருந்தனர், அவர்களில் இருவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று இரான் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Comments are closed.