தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை

தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 15 சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு (2021) நடை பெற இருப்பது 16 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் எனவும், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது; அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்கவும் தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகம் சென்சிட்டிவ் என்பதால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேரை நியமித்துள்ளோம்.

காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்!.

புதுவையில் தொகுதிக்கு ரூ. 22 லட்சம், தமிழகம் உள்பட பிற 4 மாநிலங்களில் தொகுதிக்கு ரூ. 30.8 லட்சம் வரை வேட்பாளர்கள் செலவு செய்து கொள்ள அனுமதி

தமிழகத்தில் தொகுதிக்கு ரூ. 30.8 லட்சம் வரை வேட்பாளர்கள் செலவு செய்து கொள்ள அனுமதி

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.

வேட்புமனு தாக்கல்: 10-03-21
வேட்புமனு தாக்கல் நிறைவு : 19-03-21
வேட்புமனு பரிசீலனை: 20-03-21
வேட்புமனுவை திருமப பெற கடைசி நாள் : 22-03-21
தேர்தல் நாள் : 06-04-21
வாக்கு எண்ணிக்கை : 02-05-21

இத்துடன் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலும் மேற்கண்ட அட்டவணைப்படி ஏப்.6ல் தேர்தல் நடைபெற்று, மே 2ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை:

வேட்பாளர் அல்லது வாக்காளராக இருந்தால் வாக்குச்சாவடிக்கு அமைச்சர்கள் செல்லலாம்.

சாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரை செய்யக்கூடாது.

வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது.

மாற்று கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள், ஆட்சியை விமர்சிக்கலாம்.

மாற்று கட்சியின் தனி நபர்களின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது.



Comments are closed.

https://newstamil.in/