சீரழித்த இயக்குனர் – ‘லிப்ட் டு லிப் அடிப்பியா’? இளம்பெண்ணுடன் பேசும் சர்ச்சை ஆடியோவால் பரபரப்பு!

சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக கைதான சினிமா இயக்குனர் இளம்பெண்ணுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாச படங்கள் வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட் டம் இடைப்பாடியை சேர்ந்த இயக்குநர் வேல்சத்ரியன், அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

அந்த சினிமா கம்பெனியில் போலீசார் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தரும் வகையில் 30க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென்டிரைவ் உள்ளிட்டவை சிக்கியுள்ளன. இயக்குநரின் ஹார்டு டிஸ்குகளில் 300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதாகவும், அப்பெண்களை மோசமாக படமெடுத்து வேல்சத்ரியன் சீரழித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இதனிடையே வேல்சத்ரியனிடம் இருந்து பறிமுதல் செய்த ஹார்டு டிஸ்குகளை ஆய்வு செய்ய போலீசார் அதனை சென்னைக்கு அனுப்பி உள்ளனர். அதை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே வேல்சத்ரியனிடம் 150 ஆண்கள், 250 இளம்பெண்கள் என 400 பேர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு பயோ டேட்டா கொடுத்துள்ளனர். அவைகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். பயோடேட்டா கொடுத்தவர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் சிலரிடம் தனது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தலா ரூ.30 ஆயிரம் வரையில் வேல்சத்ரியன் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கேமராவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் படங்கள் உள்ளன. ஹார்டுடிஸ்க்கில் சில பெண்களின் அரை நிர்வாண படங்களும், முழு நிர்வாண படங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. படத்தில் உள்ள பெண்களை கண்டறிந்து வரவழைத்து போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நேற்று வரவழைத்து போலீ சார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ஹார்டு டிஸ்க்குகளில் இருந்த படங்கள் எதுவும் அளிக்கப்பட்டுள்ளதா. அவ்வாறு அழிக்கப்பட்டால் அந்த பதிவுகளை மீண்டும் எடுக்கமுடியுமா என ஆய்வுக்காக சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்ப உள்ளனர் இதனிடையே பெண்களை தொலைபேசியில் பேசி மயக்கும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அதில், வேல்சத்ரியன் ” உன்னை சேலத்திலேயே பெரிய அளவுக்கு கொண்டு வர பார்க்கிறேன்.. நீ ரொமான்ஸ் சீனில் நடிப்பியா? கிஸ் அடிப்பியா? லிப்ட் டு லிப் அடிப்பியா?” என சொல்ல அந்த இளம்பெண் அப்பாவியாக எல்லாத்துக்கும் சரி என்று கூறும் ஆடியோ கதி கலங்க வைக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண் சில நாட்களாக வேல்சத்ரியனின் கிளாசுக்கு செல்லவில்லை போல. இதனால் வேல்சத்ரியன் அந்த பெண்ணின் தாய்க்கு போன் போட்டு என்னாச்சு என கேட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், ”என் மகள் ரொம்ப அப்செட்டா இருக்கா? எதாச்சி நடந்துச்சா அவளுக்கு” என்று அந்த பெண்ணின் தாய் கேட்கிறார். அதற்கு வேல்சத்ரியன், ” உங்க மகளும் நானும் தப்பு பண்ற அளவுக்கு எல்லா வாய்ப்பும் இருந்துச்சி ஆனா நா பண்ணனா? அவ கிட்டயே கேளுங்க.. நா மட்டும்தா அவளை தொடுவ, கிஸ் பண்ணுவ, எல்லாமே பண்ணுவ… வேற என்கையாச்சி போனா அவளுக்கு ஏதாவது நடந்துடும்… உங்களுக்கு பிடிக்கலைன்னா வேற ஆள வெச்சி நடிக்க சொல்லி கொடுங்க என்று வேல்சத்ரியன் சர்வ சாதாரணமா பேசியுள்ளார்.

அதற்கு பெண்ணின் தாய், இல்ல சார் நீங்களே அவளை ட்ரெயின் பண்ணுங்க…எப்படியாச்சும் அவளை சேலத்துல பெரிய ஆளா கொண்டு வாங்க” என்று அவர் கூறுவது எந்த அளவுக்கு அவர் தெளிவில்லாமல் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. இந்த இரண்டு ஆடியோக்களையும் காது கொடுத்து கேட்கமுடியவில்லை.

நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்ணை நடிக்க பழகுவது குறித்த ஆபாசமான வார்த்தைகளை அந்த பெண்ணின் தாயிடமே சொல்லி அனுமதி கேட்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகி யோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/