YOUTUBE-ல் வெளிவந்த விருமன், திருச்சிற்றம்பலம் வெளிவருமா?

நடிகர் சூர்யா தயாரிப்பில் அவர் தம்பி கார்த்தி, இயக்குநர் சங்கர் மகள் அதிதி நடித்த விருமன் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்ததால் தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் இது ஓடிடி தளத்தில் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது தனியார் youtube சேனலில் இப்படம் எச்டி டைமன்சனுடன் வெளியிடப்பட்டது.

இதனால் கார்த்தி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படம் வெளியான சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் படத்தை பார்த்தனர். சிலர் கமெண்ட் களும் பதிவிட்டு youtube சேனலை வாழ்த்தியிருந்தனர். Youtube-ல் விருமன் படம் வெளிவந்தது குறித்து 2டி நிறுவனத்திற்கு பலரும் தகவல் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த நிறுவனம் உடனடியாக சட்ட நடவடிக்கையில் இறங்கியது. இது குறித்து பட தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் பறந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் YOUTUBE நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், YOUTUBE- இல் இருந்து விருமன் படம் நீக்கப்பட்டுள்ளது.

படம் வெளியானவுடன் கீழே கமெண்ட்டில் ஏராளமானோர் வரவேற்று வாழ்த்தியிருந்தனர். மேலும் பலர் புதிய தமிழ் படங்களை இதுபோல் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். சிலர் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட புதிய படங்களை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இவர்கள் எப்படி இந்த படத்தின் லிங்குகளை எச்டி பிரிண்ட்டில் வெளியிட்டார்கள். இவர்கள் யார்? எங்கிருந்து இந்த youtube சேனல் இயங்குகிறது? என்பது குறித்து பட நிறுவனம் சார்பில் சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டு அதன் மீது மேல் நடவடிக்கை வரும் என தெரிகிறது.

தற்போது இது போன்று ஒரு நடவடிக்கை படக் குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த திருச்சிற்றம்பலம் என்று கமெண்டில் கோரிக்கை வைத்ததற்கு கண்டிப்பாக என அவர்கள் தெரிவித்தது திருச்சிற்றம்பலம் பட குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த தனியார் யூடியூப் சானலை முடக்கினாலும், சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இதே போன்று வேறொரு யுடியூப் சேனலை தொடங்கி அதில் இதுபோன்று புதிய படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளது.



Comments are closed.

https://newstamil.in/