சச்சினின் மனதை பாதித்த வீடியோவை பதிவிட்டு வாழ்த்து!
செம்ம பாஸிட்வ் என்ர்ஜியுடன் இருப்பவர் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். எப்போதுமே அதைத்தான் தனது ரசிகர்களுக்கு அவர் கொடுப்பார். அவர் ஷேர் செய்த பாசிட்டிவ் மெசேஜ் சொல்லும் வீடியோ ஒன்று இளைஞர்களிடையே மிகப்பெரிய வைரலாகி வருகிறது.
நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் 2020ஆம் ஆண்டு ஊக்கமளிக்கும் காட்சியுடன் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் சராசரி சிறுவர்களுக்கு இணையாக, நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் பார்ப்பவர்களின் மதை நெகிழ வைக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.
சச்சின் ட்விட்டரில் வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், இந்த குழந்தை மடா ராம் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் உத்வேகம் தரும் வீடியோவுடன் உங்கள் 2020 ஐத் தொடங்குங்கள். இது என் மனதை உருக்கியது, உங்களையும் உருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Comments are closed.