முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் கடந்த இருபது நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். இவருக்கு வயது 84. இவர் காலமானதை அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் கடந்த இருபது நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதுகுறித்து மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பதவில், ”மருத்துவர்களின் கடுமையான முயற்சியையும் மீறி எனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Comments are closed.