நெல்லை கண்ணன் கைது!
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த ஒரு முஸ்லிம்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க சொன்ன நெ.கண்ணன், பெரம்பலூரில் தனியார் ஓட்டலில் ஒளிந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ‘பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த நெ.கண்ணன், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற திருநெல்வேலி போலீசார், நெ.கண்ணனை கைது செய்தனர்.
திருநெல்வேலிக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப்பின், கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.