பெட்ரோலுக்கு பணம் கேட்டதால்; காரை மோதி இழுத்துச் சென்ற காவலர்! – சிசிடிவி காட்சி!

காருக்குப் போட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை காரின் பானட்டில் வைத்து இழுத்துச் சென்ற கேரளாவைச் சேர்ந்த போலீஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் கான்ஸ்டபிள் ஒருவர் தனது காரில் எரிபொருள் நிரப்ப வந்தார். எரிபொருள் நிரப்பிய பிறகு பணம் கேட்டதற்கு பெட்ரோல் பம்ப் ஊழியர் மீது காரை மோதச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா மாநிலம், கன்னூரில் உள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றுக்கு சந்தோஷ் குமார் என்ற கான்ஸ்டபிள் தனது காருக்குள் பெட்ரோல் நிரப்ப வந்தார். அங்கிருந்த ஊழியர் அனில் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அனில் உடனே கான்ஸ்டபிள் காரில் பெட்ரோல் நிரப்பினார். ஆனால் காரில் பெட்ரோல் நிரப்பியவுடன் பணம் கொடுக்காமல் சந்தோஷ் காரை எடுத்துக்கொண்டு புறப்பட பார்த்தார். இதனால் அனில், காரின் முன்னால் நின்று கொண்டு பெட்ரோலுக்கு பணம் கொடுத்துவிட்டு போகும்படி கேட்டுக்கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திடீரென காரின் முன்னால் நின்று கொண்டிருந்த அனில் மீது கான்ஸ்டபிள் காரை ஏற்றினார்.

அனில், காரின் பானட் மீது விழுந்துள்ளார். ஆனால், அவரை காரிலிருந்து இறக்கி விடாமலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் காரின் பானட்டிலேயே வைத்து இழுத்துச் சென்றுள்ளார் சந்தோஷ்குமார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்த சம்பவத்தில் காயமடைந்த அனில், கண்ணூர் டவுன் போலீஸில் சந்தோஷ்குமார் மீது புகார் கொடுத்தார்.



https://newstamil.in/