ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்: மோடி

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா வைரசை வெல்ல முழு ஊரடங்கே வழி. எனவே மக்கள் இதனை மீற வேண்டாம். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி சிரமப்படும் ஏழை மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம், கடுமையான முடிவுகள் ஏழை மக்களை பாதித்துள்ளது என்பதை உணர்கிறேன். மக்கள் அமைதியுடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிலர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவங்கள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. நாம் நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மக்களை தனிமைப்படுத்துவதே, கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி; கொரோனாவுக்கு எதிரான போரில், இதைவிட்டால் வேறு வழியில்லை.



Comments are closed.

https://newstamil.in/