தங்கம் வரலாறு காணாத உச்சம் – தங்கம் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ஒரேநாளில் அதிரடியாக 752 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் புதிய உச்சமாக சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் இன்று (பிப்ரவரி 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4166 ஆக உள்ளது. நேற்று 4,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 94 ரூபாய் அதிகரித்துள்ளது, சவரன் ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கும். 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.43,740க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அச்சத்தால் பங்கு மார்க்கெட்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து, தங்கத்தின் மீது முதலீடுகள் செய்யப்படுவதால் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.