லஞ்சம் கொடுக்காததால் பெண் போலீஸ் அடாவடி!
பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணவேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர் மனு கொடுக்க வருவோரிடம் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் அடாவடி செய்வதாகவும் புகார் எழுந்தது.
காவல்நிலையம் செல்லும் சிலர் அவரது செயல்களை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில்கூட ஒரு வாலிபர் சட்டையை பிடித்து பளார் என அறைவிட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிலர், கோவை புறநகர் எஸ்பி. சுஜித்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், பெண் தலைமை காவலர் கிருஷ்ணவேணி லஞ்சம் கொடுக்க மறுக்கும் புகார்தாரரை கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அராஜகம் செய்கிறார்.
இந்த புகாரையடுத்து, ஏட்டு கிருஷ்ணவேணி பேரூர் காவல் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்பி. உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.