பிறந்த நாளில் சோகம் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்சினை காரணமாக திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது பிறந்த நாளில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது தற்கொலை குறித்து, கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், “மனைவி நதியாவிற்கு இன்று பிறந்த நாள். தனது பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி முகநூலில் பதிவிட வேண்டுமெனக் கேட்டார். கரோனா காலம் என்பதால் அடுத்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடலாம் எனத் தெரிவித்தேன். இதனால் கோபமடைந்த நதியா என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு நேற்றிரவு முதல் மன விரக்தியில் இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

நதியாவின் மரணத்துக்கான காரணம் குறித்து தந்தை உள்ளிட்ட மற்ற உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்த நாளிலேயே நதியா தற்கொலை செய்துகொண்டது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/