590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்
அரபிக் கடலில் உருவான கதி புயல், சோமாலியா நோக்கி பயணித்தாலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் நிவர் புயலாகி, தமிழகத்தையும், புதுச்சேரியிலும் தாக்கத்தைச் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நிவர் புயல் வருகிற 25ஆம் தேதி புதன்கிழமை தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உஷார் நிலையில் அரசு அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
தற்போது, புதுச்சேரியிலிருந்து 550 கிமீ சென்னையிலிருந்து 590 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது மணிக்கு சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80லிருந்து 90 கிலோ மீட்டர் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100 லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
Comments are closed.