அதென்ன மார்ச் 31 வரை? அப்ப ஏப்ரல் 1 ல் கொரோனா போய்டுமா?

நிறைய முன்னறிவிப்புகள். கூடவே கப்சா கதைகள். அது கூட பயங்காட்டிகள். பயமே வேண்டாம் நிலவேம்பும் கோமியமும் போதும் என்னும் அரை வேக்காடுகள். டீபாப்புலேஷன், தேர்ட் வேர்ல்ட் வார் என்னும் திசை திருப்பல்கள்… எதை தான் நம்புவது என்று புரியாமல் யாரோ ஒருவரின் மூளைச்சலவைக்கு அறிவை அடகு வைக்கும் பாமர மக்கள்…

இதில் சமூக பொறுப்புணர்வுள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் சோஷியல் ஐசொலேசன்… விலகி இருங்க. நமக்கு இணையம் இருக்கு. அதில் கதைக்கலாம். பாடலாம். ஆடலாம். மற்றபடி விலகி இருங்க. அது மட்டும் தான் இப்ப நம் நாட்டைக் காப்பாற்றும்.

உண்மையில் இந்தியனாக… அதுவும் தமிழனாக பிறந்ததற்காக நாம் இந்த நேரத்தில் பெருமைப்பட வேண்டும். செம்ம மானிட்டரிங். அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை ஃபாலோ செய்து தினமும் போன் செய்து தகவல்களை அப்டேட்டில் வைத்திருப்பதாகட்டும்… சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுத்து ஸ்கூல் காலேஜஸ் மூடியதாகட்டும்… அனாவசிய புரளிகளைக் கட்டுப்படுத்துவதாகட்டும்…

ஆனா நாம் ஸ்டேஜ் 2வில் இருக்கோம். ஸ்டேஜ் 3க்கு வருவதை நாம் எடுக்கும் முயற்சிகள் மூலம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு வேளை வராமலே போனாலும் மகிழ்ச்சி தான். ஆனால் ஸ்பெயின் இத்தாலியின் கதைகள் நம்மை மகிழ்ச்சியாய் எப்படி வைத்திருக்க முடியும். இந்திய வல்லுனர்கள் ஏப்ரல் 15ல் ஸ்டேஜ் 3 வெடிக்கலாம் என்று பயப்படுகிறார்கள்…

இது மார்ச் 31 உடன் முடிந்து போகக் கூடிய கதையல்ல… ஆனால் இந்த மார்ச் 31க்குள் ஆரம்பகட்டமாக யாருக்கு பரவி இருக்கு என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களை வெளியே செல்லாமல் தடுப்பதன் மூலம் பிறருக்கு பரவாமல் கட்டுப்படுத்த முடியும். அதன் பின் அடுத்த கட்ட தீவிரம் குறித்து யோசிக்கலாம்.

ஒரு வேளை இப்ப 150 பேருக்கு கண்டுபிடித்து… மேலும் 200 பேருக்கு கண்டுபிடிக்காமல் இருந்தால்… வெளியே செல்வதன் மூலம் இவர்கள் அனைவரும் அடுத்த 2000 பேருக்கு பரப்ப வாய்ப்பிருக்கிறது. இது அவர்களுக்கே தெரியாமல் நடந்து விடும். அதனால் தான் மார்ச் 31 வரை தனிமைப்படுத்துதல்…

இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 0.1 பேர் என்ற அளவில் தான் இது பரவி இருக்கிறது. உலகத்தின் மிக மிக குறைவான சதவீதம் இது. ஏன்னா மற்ற நாடுகளில் இது மில்லியனுக்கு 300 – 500 பேர் என்ற அளவில் இருக்கு. ஆக இந்நிலை நமக்கு வரக் கூடாது என்றால்… எல்லாரும் வீட்டுக்குள்ள இருங்க.

இதெல்லாம் பாலிடிக்ஸ், இது தேர்ட் வேல்ட் வார் போன்ற விஷயங்கள் எல்லாம் இப்ப நமக்கு தேவையே இல்ல. எதுவாக இருந்தாலும் சரி… ஆக்கப்பூர்வமாக நாம் செய்ய வேண்டியது விதாண்டவாதம் பேசாமல் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே.

இதை செய்ய விடாமல் பல பேர் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது கொரோனாவில் சாவு 15 பேர் தான். ஆனால் பட்டினியால் சாவது 15 ஆயிரம் பேர் என்பதைப் போல… இப்படி சொல்வதால் நீங்கள் என்ன சாதித்து விடப் போகிறீர்கள் ? உங்களுக்கு கொரோனா வந்த பின் இப்படிச் சொல்வீர்களா ? எல்லா நாடுகளும் ஸ்தம்பித்துக் கிடக்கையில் யார் மேல் போர் தொடுக்க யாருக்கு இப்ப தெம்பு இருக்கப் போகிறது ?

எத்தனை பேர் சாகிறார்கள் என்பதல்ல மேட்டர்… அவர்கள் எத்தனை பேருக்கு பரப்புகிறார்கள் என்பது தான் விஷயம்… முதலில் பரப்புவதைத் தடுக்கணும். இல்லைன்னா தேவைப்படுபவர்களுக்கான உரிய மருத்துவம் உரிய நேரத்தில் கிடைக்காத நிலைமையை நாம் வெகு விரைவில் அடைவோம் இத்தாலியைப் போல…

இப்படி தனிமைப்படுத்தி வைத்தவர்களில் 167 பேர் தப்பித்து ஓடியிருக்கிறார்கள் லூதியானாவில். அதில் 27 பேரைக் கண்டுபிடித்து விட்டார்கள். மீதி பேர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லையாம். இப்படி ரெட் அலர்ட் ஏரியாவிலிருந்து தப்பித்துப் போனவர்களால் தான் இத்தாலி இன்று மயான பூமி ஆகி இருக்கிறது. அது நமக்கெல்லாம் ஒரு பாடம். தப்பிய அந்த நபர்களால் என்ன ஆகுமோ தெரியல…

ஒரு நேரத்தில் ஒரு ஊரில் மொத்தமாக ஆயிரம் பேருக்கு தான் வெண்டிலேசனோ ஆக்சிஜனோ தர முடியுமெனில் பத்தாயிரம் பேர் வந்து விட்டால் என்ன செய்வது ? பின் நம்மில் பல பேருக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் போகுமல்லவா…

இத்தாலியில் என்ன நடக்கிறது தெரியுமா…

என் கண் முன்னால் 3 பேரை சாகவிட்டேன் என்று இத்தாலி மருத்துவர் ஒருவர் அழுதிருக்கிறார். ஏன்னா அங்க அரசாங்கம் டாக்டர்களின் இஷ்டத்துக்கு விட்டு விட்டது. யாரை காப்பாற்ற வேண்டும் யாரை காப்பாற்ற வேண்டாமென்று டாக்டர்களே முடிவு எடுத்துக் கொள்ள வேண்டியது தான். அதிக நாள் வாழும் வாய்ப்பு இருக்கும் இளவயதினருக்கு ப்ரிஃபரன்ஸ். வயதானவர்களை சாக விட்டு விடுகிறார்கள். காரணம் மருத்துவ உபகரண தட்டுப்பாடு.

இத்தாலி சின்ன நாடு… அதுக்கே இந்த நிலை என்றால் வாட் அபவுட் இந்தியா… நம் மக்கள் தொகை என்ன… பாப்புலேசன் டென்சிட்டி என்ன… ப்ரிவென்ஷன் இஸ் பெட்டர் தேன் க்யூர் என்ற மந்திரத்தை தான் இப்ப நாம் உச்சரித்துக்.கொண்டிருக்கிறோம்.

இப்ப சென்னையில் ரெண்டாவது கொரோனா கேஸ். அடுத்ததா மஹாராஷ்ட்ராவில் கொரோனா நோயாளிக்கு மருத்துவம் பார்த்த டாக்டருக்கும் கொரோனா. சோ, இது நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டிய நேரம்.

கொரோனா இந்துவா முஸ்லிமா ஆணா பெண்ணா குழந்தையா முதியவரா என்ன இனம் என்ன நாடு என்ன மொழி எதுவுமே பார்ப்பதில்லை… இது நாம் பயப்பட வேண்டிய நேரமல்ல… எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்… நிதானமாக யோசித்து நம்மை நாமே பாதுகாப்பாக சேனிடைஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது நலம்…

நாம் ஸ்டேஜ் 3 க்கே போக வேண்டாம். நாம் இந்தியர்கள். புத்திசாலிகள். என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று நாமும் உணர்ந்து நம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பத்து பேருக்காவது உணர்த்துவோம்… ஒரு புத்திசாலித்தனமான முடிவு நம் சரித்திரத்தையே மாற்றக் கூடியது. உலகமே கொரோனாவால் சுருண்டு கிடந்த போது இந்தியர்கள் மட்டும் அதை வென்று நின்றார்கள் என்று நாளைய சரித்திரம் பேசட்டும்…



Comments are closed.

https://newstamil.in/