கொரோனா வைரஸ்: தமிழக முதல்வரின் முக்கிய எச்சரிக்கை
கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்திகள் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய எச்சரிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
யாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் பரபரப்புக்காக கொரோனா குறித்த உறுதி செய்யப்படாத செய்திகளை வெளியிட வேண்டாம் என ஊடகங்களுக்கு சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments are closed.