கட்டுப்பாடுகளை மீறினால் 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம்
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், இதனை மீறினால் சட்ட ரீதியான நவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்க சட்டம் வழி செய்கிறது. தொற்றுநோய் சட்டம் 1897-ன் படி அரசின் விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.
Comments are closed.