அரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், ‘நிவர்’ புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணி குறித்து அனைத்து துறை மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ’கடலூர் அதிகமாக பாதிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 77 மின்கம்பங்கள், 12 கால்நடைகள், 21 கூரை வீடுகள், 321 மரங்கள், 150 ஏக்கர் வாழை, 59 ஏக்கர் மரவள்ளி, 5,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது.

இதோடு விட்டுவிடாமல் இன்னும் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணியை தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். தற்போது எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பை தெரியப்படுத்துகிறேன்.

மின்சாரம் நிறுத்தப்படாவிட்டால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மக்கள் பாதுகாப்பாக இருக்கவே மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின் ஊழியர்களை போல் உழைத்தால் தான் அருமை புரியும். ரிமோட் கன்ட்ரோல் போல் உடனே சரியாகி விடாது என கூறியுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/