முதல்வர் ஸ்டாலின் நாளை டில்லி பயணம்
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக ஸ்டாலின், நாளை பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேச உள்ளார். அதற்காக நாளை காலை, 7:20 மணிக்கு, தனி விமானத்தில் டில்லி செல்கிறார். அங்கிருந்து, தமிழ்நாடு அரசு இல்லம் செல்லும் அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வருடன் அமைச்சர்கள் தியாகராஜன், சுப்பிரமணியன், தலைமை செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் செல்ல உள்ளனர்.
பிரதமரை சந்தித்த பிறகு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், முதல்வர் சந்தித்து பேச உள்ளார். மறுநாள் காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments are closed.