பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி எஸ்.கே யாதவ், 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஆஜராகவில்லை.

தீர்ப்பில், மசூதி இடிக்கப்பட்டது முன் கூட்டியே திட்டமிடப்பட்டது இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்வானி உள்ளிட்டோர் வன்முறையை கட்டுப்படுத்த முயன்றுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/