5 கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம்! வானில் நிகழும் அரிதான நிகழ்வு!
வரவிருக்கும் வாரத்தில், பூமியின் பல பகுதிகளிலிருந்து ஐந்து கிரகங்கள் வெறும் கண்களால் காணலாம் இது ஒரு தனித்துவமான நிகழ்வு என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.
விஞ்ஞானி பி.ஜி. சித்தார்த் கூறுகையில், “எதிர்வரும் நாட்களில் ஹைதராபாத்தில் இருந்தும் உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைக் காணலாம். நடக்கும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த வாரம் மாலை முதல் காலை வரை ஐந்து கிரகங்களைக் வெறும் கண்ணால் காண முடியும் . “
“இந்த கிரகங்கள் புதன், வீனஸ், செவ்வாய், வியாழன் மற்றும் சனி. யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ ஆகிய மூன்று கிரகங்களை ஒரு தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும்” என்று அவர் கூறினார்.
Comments are closed.