கோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு
கோழிக்கோடு விமான விபத்து விமானத்தின் கருப்பு பெட்டிகள் – ஒரு டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர் மற்றும் ஒரு காக்பிட் குரல் ரெக்கார்டர் ஒரு விமானத்தின் உயரம், நிலை மற்றும் வேகம் பற்றிய முக்கியமான தகவல்களையும், விமானிகளுக்கு இடையிலான உரையாடல்களின் நகல்களையும் சேமிக்கிறது.
துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்று தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை கேரளாவின் கோழிக்கோட்டில் மோதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் டேபிள் டாப் விமான நிலையத்தில் ஓடுபாதையின் நீளத்திற்கு 1 கி.மீ தூரத்தில் தரையிறங்கியது என்று விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ கூறியுள்ளது.
மீட்பு நடவடிக்கை முடிந்து மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், பயணிகளைக் குறித்த தகவல்களுக்கு, உதவிகளுக்கு நாடவேண்டிய ஹெல்ப்லைன் எண்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு விமான விபத்து நடந்த கரிப்பூர் விமானநிலையம் பாதுகாப்பாக இல்லை என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்
பாதுகாப்பின்மை குறித்து அவர் 9 வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். மங்களூருவில் ஏற்பட்ட விமான விபத்து சமயத்தில் இது பற்றி அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அப்போது அது கண்டு கொள்ளப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.
Comments are closed.