ஆபாச படம் அப்லோட் அதிரடி கைதான கிறிஸ்டோபர்

சிறார்களின் ஆபாச வீடியோ பகிர்ந்ததற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் பெரும்பாலும், தன்னுடைய அடையாளத்தை மறைக்க நிறைய புனை பெயர்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதாவது, நிலவன், ஆதவன், வளவன். இந்த பெயர்களில்தான் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார். பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியும் உள்ளார்.

இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.

இது குறித்து ஏ.டி.ஜி.பி., ரவி கூறுகையில்;

கிறிஸ்டோபர், 15 பேருக்கு ஆபாச படங்களை பேஸ்புக்கில் அனுப்பிய 15 பேரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கிறிஸ்டோபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தெரியாமல் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம். வேண்டுமென்றே இது போன்ற படங்களை பகிர்பவர்கள் தான் கைது செய்யப்படுவர். இவ்வாறு ரவி கூறினார்.



Comments are closed.

https://newstamil.in/