Vijayakanth Bhushan Awards: நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது – 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் பட்டியலில், வெங்கையா நாயுடு, நடிகர் விஜயகாந்த், சிரஞ்சீவி, வைஜெயந்திமாலா உட்பட 132 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அண்மையில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகராக இருந்து அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து குறிபிட்ட இடத்தைப் பிடித்த தேமுதிக. தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் அவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி காலாமானார்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 132 விருதுகள் இடம் பெற்றுள்ளன. மேனாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் விஜயகாந்த், மெகா ஸ்டார் கொனிடேலா சிரஞ்சீவி மற்றும் பிரபல நடிகை வைஜெயந்திமாலா பாலி உள்ளிட்டோருக்கு, இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் மறைந்த பிந்தேஷ்வர் பதக் மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது, நடிகரும், அரசியல்வாதியுமான மிதுன் சக்ரவர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக் மற்றும் பாடகி உஷா உத்துப் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருது, கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் சிவில் போன்ற பல்வேறு துறைகள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 110 பிரபலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனது.

இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் இந்திய குடியரசுத் தலைவர் விருது வழங்குவார். விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள் பிரிவில் எட்டு பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விபூஷன் விருதுகள் 2024 வென்றவர்களின் பட்டியல்

  1. திருமதி வைஜெயந்திமாலா பாலி – கலை – தமிழ்நாடு
  2. கொனிடேலா சிரஞ்சீவி – கலை – ஆந்திரப் பிரதேசம்
  3. எம் வெங்கையா நாயுடு – பொது விவகாரங்கள் – ஆந்திரப் பிரதேசம்
  4. பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப் பின்) – சமூகப் பணி – பீகார்
  5. திருமதி பத்மா சுப்ரமணியம் – கலை – தமிழ்நாடு

பத்ம பூஷன் விருதுகள் 2024

  1. விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) – கலை – தமிழ்நாடு
  2. ஹோர்முஸ்ஜி என் காமா இலக்கியம் மற்றும் – கல்வி – பத்திரிகை மகாராஷ்டிரா
  3. மிதுன் சக்ரவர்த்தி – கலை – மேற்கு வங்காளம்
  4. சீதாராம் ஜிண்டால் – வர்த்தகம் மற்றும் தொழில் – கர்நாடகா
  5. யங் லியு – வர்த்தகம் மற்றும் தொழில் – தைவான்
  6. அஷ்வின் பாலசந்த். – மருத்துவம் – மகாராஷ்டிரா
  7. சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்) – பொது விவகாரங்கள் – மேற்கு வங்காளம்
  8. ராம் நாயக் பொது – விவகாரங்கள் – மகாராஷ்டிரா
  9. தேஜஸ் மதுசூதன் படேல் – மருத்துவம் – குஜராத்
  10. ஓலஞ்சேரி ராஜகோபால் – பொது விவகாரங்கள் – கேரளா
  11. தத்தாத்ரே அம்பாதாஸ் மாயலூ அல்லது ராஜ்தத் – கலை – மஹாராஷ்டிரா
  12. டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை – ஆன்மிகம் – லடாக்
  13. பியாரேலால் சர்மா – கலை – மகாராஷ்டிரா
  14. சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் – மருத்துவம் – பீகார்
  15. திருமதி உஷா உதுப் – கலை – மேற்கு வங்காளம்
  16. திருமதி எம் பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்) – பொது விவகாரங்கள் – கேரளா
  17. குந்தன் வியாஸ் இலக்கியம் மற்றும் கல்வி – பத்திரிகை – மகாராஷ்டிரா


Comments are closed.

https://newstamil.in/