மேலும் ஒரு ரஜினி சாதனையை முறியடித்த விஜய் – என்ன தெரியுமா?
சாதனை மேல் சாதனை செய்யும் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.
பிகில் திரைப்பட வசூல் தொடர்பாக வருமான வரித்துறை ரெய்டு என பல இருந்தாலும், வசூலில் கிங் என்று விஜய் நிருபித்துவிட்டார். இதை தொடர்ந்து விஜய் ரஜினிக்கு இணையாக மார்க்கெட்டை கோலிவுட்டில் நிலை நாட்டினார்.
விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பிகில் படம் வெளிநாட்டில் மட்டும் மிகப்பெரும் வசூல் சாதனை செய்துள்ளது, இதன் மூலம் விஜய் தன்னுடைய வெளிநாட்டு மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளார். இவை எந்த அளவிற்கு என்றால், ரஜினியின் கபாலி படத்தின் வெளிநாட்டு வசூலை பிகில் முறியடித்துவிட்டதாக கூறப்படுகின்றது.
தளபதி விஜய் பிகில் படத்தை ஒரே மொழியில் வெளியிட்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளார்.
முன்னதாக ரஜினி நடித்த 2.0 வெளிநாடுகளில் மட்டும் ரூ 140 கோடிகள் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது, இவை ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கையில் ரஜினியை ஒரு விதத்தில் விஜய் முந்திவிட்டார் என்பதே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
Comments are closed.