முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
இதுகுறித்து விஜய் தரப்பிலிருந்து ஏற்கனவே தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை வைத்தனர். பாதி திரையரங்கில் மட்டுமே ரசிகர்களை அனுமதித்தால் வசூல் பாதிக்கும். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதே போல் பெரிய திரைநட்சத்திரங்கள் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒளிபரப்பாகும் அதற்கும் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருப்பதால், அதற்கு முன்பாக இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நினைத்தது விஜய் தரப்பு.
இந்த்நிலையில் மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் திடீர் என சந்தித்தார். தியேட்டர்களில் பாரவையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments are closed.