விஜய் அரசியலுக்கு வருவது உறுதி? உண்மையை உடைத்த பி.ஆர்.ஓ!

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் முதன் முறையாக நடித்து வருகிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அருஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யிடம் பல ஆண்டு காலம் பி.ஆர்.ஓ வாக பணிபுரிந்த செல்வகுமார் என்பவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

செல்வகுமார் அந்த பேட்டியில் “விஜய் அவர்களுக்கு அரசியலுக்கு வரணும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றவர்களை மாதிரி சொல்லி சமாளிக்க கூடிய ஆள் கிடையாது விஜய். அவர் கண்டிப்பாக 100% அரசியலுக்கு வருவார். அவருக்கு கலப்படம் இல்லாத ஒரு அரசியல் தர வேண்டும் என்பது ஆசை” என்று வெளிப்படையாக கூறினார்.

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார வரவேற்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி அண்மையில் கூறியிருந்தார்.



Comments are closed.

https://newstamil.in/