நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது கவனம் ஈர்த்துள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். அவர் அங்கு வந்த விதம் அனைவரின் பார்வையையும் அவர் மீது திருப்பியது. காரணம் முகக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டியபடி அங்கு வந்து ரசிகர்களை ஆச்சயத்தில் ஆழ்த்தினார். அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர்.
விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒரு வேலை பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக அவர் சொல்லியிருக்கிறாரோ என விஜய் ரசிகர்கள் இனையத்தில் விவாதிக்க தொடங்கி விட்டனர். சைக்கிளில் வந்த அவர் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்.
நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ கூறும் போது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என கூறினார்.
ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதால் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததற்கு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.வாக்குச்சாவடி மையம் மிக அருகில் இருந்ததால் சைக்கிளில் வந்தார் விஜய். நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என கூறினார்.
Comments are closed.