சிறுவயது விஜய் சேதுபதி ரோலில் கலக்கப்போவது இவர் தான்

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக், டிசம்பர் 31ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தளபதி ரசிகர்கள் உற்சாக துள்ளலில் அதை தேசிய அளவில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், பிரேம், ஸ்ரீமன், விஜய் டிவி புகழ் தீனா, விஜே ரம்யா, கௌரி கிஷன் உள்ளிட்டோர் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்கிற ஜேடி என்ற தகவல் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்த சரவெடி அப்டேட்டாக விஜய்சேதுபதியின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் மகேந்திரன் பெரும்பாலான தமிழ் படங்களில் முன்பு குழந்தை நட்சத்திரமாகவும், விழா என்ற படத்தின் நாயகனாகவும் நடித்தது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.

https://newstamil.in/