சூதாட்டம் – நடிகர் ஷாம் திடீர் கைது – வீடியோ

நடிகர் ஷாம் உட்பட 13 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாம் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதை தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்தவர். அதோடு இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே போன்ற பல நல்ல படங்களில் நடித்தவர்.

அது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலுன் ஒரு சில முன்னணி நடிகர்களின் படத்தில் செகண்ட் ஹீரோவாக தலையை காட்டினார். மேலும், தன் முகத்தை வருத்தி அவர் நடித்த 6 மெழுகுவத்திகள் படத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.

தற்போது கூட உள்ளம் கேட்குமே இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று ஷாம் முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஷாம், அவருக்கு சொந்தமாக சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், அடிக்கடி பணம் வைத்து சீட்டு விளையாடி, சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனால் நேற்றிரவு, போலீசார் திடீர் என, நடிகர் ஷாமுக்கு சொந்தமாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை திடீர் என சோதனை செய்தனர். அதில் ஒரு வீட்டில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர், சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர்களை கைது செய்தனர்.

அதே போல் இவர்களிடம் இருந்து, அவர்கள் வைத்து விளையாடிய பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்த போது, இங்கு சீட்டு விளையாடுவதற்காக பல இயக்குனர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் வருவது வழக்கம் என்று, இந்த வீட்டை நடிகர் ஷாம், சூதாட்ட கிளப் போல் வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

இரவு நேரத்தில் போலீசார் பிரபல நடிகர் உட்பட 13 பேரை கைது செய்துள்ள சம்பவம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/