ஆபாச ட்வீட் அஜித்திடம் நியாயம் கேட்கும் கஸ்தூரி

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் அஜித் ரசிகர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பதிவில், ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனது பெயரை சம்பந்தப்படுத்தியதற்காக நடிகை கஸ்தூரி வார்த்தைப் போரைத் தொடங்கினார்.

ஆபாசமாக கருத்து பதிவிட்ட ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி. அஜித் ரசிகர் என்று சொல்லி அவரது பெயரை கெடுக்க வேண்டாம் என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த நடிகை கஸ்தூரி, ஆபாச ட்வீட் செய்த அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகாரளித்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர், உண்மையான அஜித் ரசிகர்கள் இப்படி பதிவிடமாட்டார்கள் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்தவார்த்தை யுத்தம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் அஜித் குமார் மற்றும் ஷாலினி அவர்கள் தலையிட்டு ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அப்படியும் ஆத்திரம் அடங்காத கஸ்தூரி, “அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து #DirtyKasthuriAunty என்கிற ஹேஷ்டேகை உருவாக்கி ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யவிட்டனர் அஜித் ரசிகர்கள். இதை பார்த்த பலரும் எதற்காக இந்த ஹேஷ்டேக் என்று கேட்டார்கள்.

DirtyKasthuriAunty என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டானதை பார்த்த கஸ்தூரி, தல ரசிகர்களை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். இது தான் அவர்களின் ஒரே வேலையா? கேவலமாக பேசுவதும், நெகட்டிவ் டேகிங் செய்வதும். சம்பந்தப்பட்டவர்களை தடுத்து நிறுத்தாமல் ஒன்று சேர்ந்து கொண்டு வசைபாடுவதா என்று கேட்டுள்ளார் கஸ்தூரி.



Comments are closed.

https://newstamil.in/