கட்சி துவங்குவது குறித்து ஒரு விஷயத்தில் ஏமாற்றம் – சஸ்பென்ஸ் வைத்த ரஜினி
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் தம்மிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு தான் அளித்த பதில் திருப்தியாக இருந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறினார். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு ஏமாற்றம் இருந்ததாகவும், அது என்ன என்று பிறகு தெரிவிப்பதாக ரஜினி தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ரஜினியின் வீட்டில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் கமலுடன் இணைவது குறித்து ரஜினி கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியல் வெற்றிடத்தை கமலுடன் சேர்ந்து நிரப்புவீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு ‘நேரம் தான் பதில் சொல்லும்’ என ரஜினி கூறினார்.
Comments are closed.