‘ஒரு குட்டி கதை’ ஒரே பாட்டில் போட்டு தாக்கிய விஜய்!

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் தனது குரலில் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தன்னை சுற்றி நடக்கும் அத்தனை பிரச்சனைகளுககும் பதில்அளிக்கும் வகையில் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாட்டு அமைந்துள்ளது. அதில் விஜய் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் தான் வரிகள் இருக்கிறது. மேலும் தனக்கு எதிராக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் உள்ளது அது.

அதாவது வாழ்க்கை மிகச்சிறியது என்பதால் எப்பவும் சந்தோஷமாகவே இருக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் பாடல் தொடங்குகிறது. ‘Dont be the person spreading Hatred’ என வரும் வரியில், அதில் இருப்பவரை காவி நிறத்தில் காட்டியுள்ளனர். அதனால் விஜய்க்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுத்திவரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தான் விஜய் பதிலடி கொடுத்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையிலும் பாஜகவை நேரடியாக தாக்கும் வகையிலும் இந்த பாடலின் ஒரு வரியில் “பல வித பிரச்சனைகள் வரும்.. போகும்.. கொஞ்சம் கூலாகவே இருங்க” என்று தங்லீசில் பதில் அளித்துள்ளார் விஜய். அத்துடன் டிசைன் டிசைனா பிரச்சனைகள் இனி பிரச்சனை பல வரும் என கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, பொருளாதார வீழ்ச்சி, கரோனா என பல பிரச்சனைகள் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

இப்படி பாடலில் உள்ள எல்லா வரிகளுக்கும் அர்த்தத்தை தமிழில் மொழி பெயர்த்தால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதனை சந்தோஷமாக கடக்க வேண்டும், எதிர்க்கொள்ள வேண்டும் என்றே அமைகிறது இப்பாடல்.

இன்னும் நிறைய உள் அர்த்தங்கள் இந்த பாடலில் இருக்கின்றது



Comments are closed.

https://newstamil.in/