அஞ்சலி வேண்டாம்; இனி ஏன் பெயர் ‘அஜீஸ் ஜெய்’; நடிகர் ஜெய் அறிவிப்பு

நடிகர் ஜெய் நடிப்பில் சில வாரங்கள் முன்பு ரிலீஸ் ஆன கேப்மாரி படம் மோசமான விமர்சனங்கள் தான் சந்தித்தது. அடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெய் பேசியுள்ளார். அதில் அவர், ‘எனக்கே தெரியாத விஷயங்களை மக்கள் கூறுகிறார்கள். கல்யாணம் சந்தோஷமான விஷயம், அது முடிவானால் கண்டிப்பாக மக்களிடம் தெரிவிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு, அஞ்சலியுடன் காதல் எனப் பரவும் செய்தி குறித்து பேசுகையில், ‘அஞ்சலியுடன் காதலில் இல்லை என்றும் அவரை வருங்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை’ என்றும் ஜெய் கூறியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் ஜெய் தனது பெயரை அஜீஸ் ஜெய் என மாற்றிக் கொள்ள இருப்பதாகவும் அந்தப் தெரிவித்துள்ளார்.

சில வருடங்கள் முன்பு ஜெய் இஸ்லாமியராக மாறிவிட்டார் என செய்திகள் வந்தது. ஆனால் அவர் தன்னுடைய பெயரை மாற்றாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் பெயரை மாற்ற போவதை உறுதி செய்துள்ளார்



Comments are closed.

https://newstamil.in/