பிரதமர் மோடி ஆஸ்கருக்குப் போட்டியிடலாம் – குஷ்பு

சமூக வலைதளங்களிலிருந்து விலக யோசித்து வருவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது குறித்து, ஞாயிற்றுக்கழமை திட்டமிட்டேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் அவரை, 5.33 கோடி பேரும், ஃபேஸ்புக்கில் 4.4 கோடி பேரும் இன்ஸ்டாகிராமில் 3.52 கோடி பேரும் பின்தொடர்ந்து வருகிறார்கள். அதேபோல், அவரது யூடியூப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 45 லட்சமாகும்.

இந்நிலையில் சமூக வலைதளங்களை விட்டு வெளியேற நினைப்பதாக பிரதமர் செய்த ட்வீட்டுக்கு, பதிலளித்திருக்கும் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, “பிரதமர் ஆஸ்கருக்கு போட்டியிடலாம்” என ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் ட்வீட் குறித்து காங்கிரஸின் ராகுல் காந்தி, “சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாக, வெறுப்பைக் கைவிடுங்கள்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.



Comments are closed.

https://newstamil.in/