ஹீரோ விமர்சனம்

சிவகார்த்திகேயன் ஹீரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே உச்சத்திற்கு சென்ற ஹீரோ சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள ஹீரோ படம் என்பதால், தியேட்டர்களில் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஹீரோ படத்தின் விமர்சனம் இதோ

சிவகார்த்திகேயன் பள்ளியில் படிக்கும்போதே சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பதே கனவு. நன்றாக படிக்கும் சக்தி ஒரு கட்டத்தில் தன் சான்றிதழை விற்க வேண்டி வருகிறது. அதன் பிறகு அவர் போலிச் சான்றுகள் தயாரித்து விற்பனை செய்கிறார். அவர் தன் தங்கையாக பார்க்கும் மதி ஊழல் கல்வி முறையால் உயிர் இழக்கிறார்.

இதனாலேயே இவரை உலகம் கொஞ்சம் விலக்கியே பார்க்க, சொந்த அப்பாவே நீ என் கண்முன் நிற்காதே என்று ஒரு கட்டத்தில் சொல்லும் நிலைக்கு வருகின்றார், அதனால், ப்ராடு செய்தால் போதும், நமக்கு தேவை பணம் மட்டும் தான் என்று முடிவெடுத்து போலி சான்றிதழ் அடித்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றார் சிவகார்த்திகேயன்.

ஒருகட்டத்தில் ஃபிராடாக இருந்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து வில்லனான மகாதேவை எதிர்கொள்கிறார். இதற்கிடையே அர்ஜுன் பணக்காரர்களிடம் இருந்து திருடி கல்வி நிறுவனம் ஒன்றை துவங்கி இலவசமாக கல்வி அளிக்கிறார். அதில் ஒரு மாணவி இவானாவிற்கு ஏரோநாட்டிகல் படிக்கவேண்டும் என்று விருப்பம், அதை சிவகார்த்திகேயன் அர்ஜுனுக்கு தெரியாமல் நிறைவேற்ற, இவானா கண்டுப்பிடிப்பு வெளி உலகிற்கு தெரிகின்றது.

ஆனால், அந்த கண்டுப்பிடிப்பு வெளிவருவதன் மூலம் கார்ப்ரேட் கம்பெனிகள் பிஸினஸ் பாதிக்கும் என்பதால் வில்லன் அபி தியோல், இவானாவை குற்றம் செய்தவர் என நிரூபிக்க, இவானாவும் தற்கொலை செய்துக்கொள்கின்றார், இவர்களை பழிவாங்க சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாறி என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.

சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக காட்டும் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வில்லன் அபய் தியோல் ஒரே ஆளாக கல்வி முறையை நாசம் பண்ணுவது என்பது நம்பும்படியாக இல்லை. படத்தில் சிவகார்த்திகேயன் தாண்டி அர்ஜுனும் ஹீரோ தான், சொல்லப்போனால், முதல்பாதியில் எல்லாம் சிவகார்த்திகேயனை மிஞ்சும் மாஸ் காட்சிகள் இவருக்கு உள்ளது பல இடங்களில் சிவாவை தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் அர்ஜுன். படத்திற்கு மிகப்பெரிய பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான்.

ஒரு பாட்டில் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்றாலும், அதற்குள் சூப்பர் ஹீரோவாக மாறுவது பாட்ஷா, அண்ணாமலை ரஜினி ஒரே பாடலில் பணக்காரன், டான் ஆவது போல் தான்.

மேலும், படம் அட இது என்ன ஷங்கரின் ஜெண்டில் மேன் போலவே உள்ளது என்று நினைத்தால், அர்ஜுன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவர் சொல்லும் ப்ளாஷ்பேக், இனி ஜெண்டில்மேன் தேவையில்லை, ஹீரோ வேண்டும் என அவரே சொல்வது, மித்ரன் சபாஷ் வாங்குகின்றார்.

படத்தின் மூன்று முக்கியமான ஹீரோக்கள், யுவனின் இசை, ரூபன் எடிட்டிங் மற்றும் ஜார்ஜ் ஒளிப்பதிவு. இத்தனை அழகாக காட்சிகள் படம்பிடித்ததற்கு ஜார்ஜுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

மொத்தத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களம், சொல்ல வந்த கருத்து, அதை கிளைமேக்ஸில் ஏவி மூலம் காட்டிய விதம் சூப்பர்.
இரண்டாம் பாதியில் கொஞ்சம் லாஜிக் கவனித்திருக்கலாம், இஷ்டத்திற்கு சில காட்சிகள் நீள்கின்றது.

படத்தில் சில மைனஸ்கள் இருந்தாலும் பார்க்கும் படி உள்ளது ஹீரோ.



Comments are closed.

https://newstamil.in/