நடிகர் விஜய் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா?
நடிகர் விஜய் மற்றும் ‘பைான்சியர்’ அன்புச்செழியன் வீட்டில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டனரா என்பது குறித்து பல பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின் பேரில், ஏஜிஎஸ் குழுமம், நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 38 இடங்களில், சோதனை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பாக, 77 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். அத்துடன், அகோரத்தின் மகளிடமும் விசாரித்தனர்.
இந்நிலையில், வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள, அன்புச்செழியன் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையை துவக்கி உள்ளனர். அவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை பெற்று, ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஆவணங்களில் உள்ள பரிவர்த்தனைகள் உறுதி செய்யப்பட்டால் அன்புச்செழியன், ஏஜிஎஸ் குழுமம், விஜய் அமலாக்கத்துறை பிடியில் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவுகிறது.
Comments are closed.