இந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்! பிக்பாஸே கடுப்பாகிட்டார் போல!
விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறப் போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதுகுறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா மற்றும் அனிதா ஆகியோரை நாமினேட் செய்தனர்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் நச நசவென்று பேசியே அனைவரையும் கடுப்பேற்றும் அனிதாதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்தவாரம் சக போட்டியாளர்களிடம் அனிதா மிக கடுமையாக நடந்து கொண்டார்.
எனவே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் குறைவானவர்களே ஓட்டுக்களை போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிதா பிக்பாஸ் ரசிகர்களின் மனதை கவரவில்லை.
அத்துடன் நிகழ்ச்சியில் லொட லொட என்று பேசிக்கொண்டே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அவர் குறைக்கிறார். இதனால், அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அத்துடன் இப்படி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை குறைப்பதால் பிக்பாஸே வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுவார் என்று கூறப்படுகிறது.
Comments are closed.